GHOST STORY

அமானுஷ்யம், மந்திரம், தந்திரம், பேய், பிசாசு போன்றவை சற்று பயமேற்படுத்துவதாக இருந்தாலும் அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம்மிடம் கொஞ்சமும் குறையாமல் இருப்பது தான் அதிசயம்.

நான் வாழும் சிங்கப்பூரில் வசிக்கும் மக்களிடம் இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றியும், இங்கு கூறப்படும் உண்மை சம்பவங்களை அடிப்டையாகக் கொண்ட அமானுஷ்ய கதைகளை பற்றியும் தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம். 

அறிவோமா அமானுஷ்யம்

அறிவோமா அமானுஷ்யம்!?

சிங்கப்பூரில் ஹங்கிரி கோஸ்ட் ஃபெஸ்டிவல் (hungry ghost festival) என்னும் திருவிழா சீனர்களின் சந்திர வருடப் பிறப்பின் ஏழாவது மாதம் வெகு விமர்சையாக நடைபெறும். பிஃப்ரவரி மாதத்தில் சந்திர புத்தாண்டு துவங்கும். அதில் இருந்து ஏழாம் மாதம் என்பது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அந்த மாதத்தை அவர்கள் கோஸ்ட் மந்த் என்றே அழைப்பர். கோஸ்ட் மந்த்தின் பதினைந்தாம் நாள் திருவிழாவின் உச்ச நாளாக கொண்டாடப்படும். நமது ஆடி அமாவாசை தான் அந்த நாள்…

Keep reading